Satham Illatha Thanimai Ketten by S. P. Balasubrahmanyam, Sujatha Mohan song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam, Sujatha Mohan |
---|---|
Album: | Single |
Music: | Ramani Bharadwaj |
Lyricist: | Vairamuthu |
Label: | Ap International |
Genre: | |
Release: | 2022-02-11 |
Lyrics (English)
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் | SATHAM ILLATHA THANIMAI KETTEN SONG LYRICS IN TAMIL: The song is recorded by S. P. Balasubrahmanyam and Sujatha Mohan from the Tamil film Amarkalam , directed by Saran. The film stars Ajith Kumar, Shalini, Raghuvaran, Raadhika and Nassar in the lead role. The music of "SATHAM ILLATHA THANIMAI KETTEN" song is composed by Ramani Bharadwaj , while the lyrics are penned by Vairamuthu . Satham illatha thanimai keten Yutham illaadha uzhagam keten Rathathil endrendrum vegam keten Ragasiyamillaa ullam keten Satham illatha thanimai keten Yutham illaadha uzhagam keten Rathathil endrendrum vegam keten Ragasiyamillaa ullam keten Satham illatha thanimai keten Yutham illaadha uzhagam keten Rathathil endrendrum vegam keten Ragasiyamillaa ullam keten Uyirai killaadha uravai keten Otrai kanneer thuliyai keten Valigal seiyaadha vaarthai keten Vayadhuku chariyaana vaazhkai keten Idigal illaadha megam keten Ilamai kedaadha mogamketen Parandhu parandhu nesam keten Paasaangillaadha paasam keten Pullin nuniyil paniyai keten Poovin madiyil padukai keten Thaanae urangum vizhiyai keten Thalaiyai kodhum viralai keten Nilavil nanaiyum solai keten Neela kuyilin paadal keten Nadandhu poga nadhikarai keten Kidandhu urula pulveli keten Thottu paduka nilavai keten Etti parika vinmeen keten Thukam marandha thookam keten Thookam manakum kanavai keten Boomikellam oru pagal keten Poovukellam aayul keten Manidharkellam oru manam keten Paravaikellam thaai mozhi keten Uzhagukellam sama mazhai keten Oorukellam oru nadhi keten Vaanam muzhuka nilavai keten Vaazhumbodhae svargam keten Ennam ellam uyara keten Eriyum theeyaai kavidhai keten Kanneer kadandha gnaanam keten Kaamam kadandha yogam keten Sutrum kaatrin sudhandhiram keten Situ kuruviyin siragai keten Uchandhalaimel mazhaiyai keten Ullangaalil nadhiyai keten Pankonda paadal payila keten Paravaikirukum vaanam keten Nandri kedaadha natpai keten Nadunga vidaadha selvam keten Malaril oru naal vasika keten Mazhaiyin sangeedham rusika keten Nilavil nadhiyil kulika keten Ninaivil sandhanam manaka keten Vizhundhaal nizhal pol vizhavae keten Azhudhaal mazhai pol azhavae keten Ekaandham ennodu vaazha keten Eppodhum sirikindra udhadugal keten Panithuli pol oru sooriyan keten Sooriyan pol oru panithuli keten Raajaraajanin vaalai keten Valluvan ezhudhiya kolai keten Bhaaradhiyaarin sollai keten Paarthiban thodutha villai keten Maaya kannan kuzhalai keten Madurai meenaakshi kiliyai keten Sondha uzhaipil sorai keten Thottu kolla paasam keten Mazhaiyai pondra porumaiyai keten Pullai pondra panivai keten Puyalai pondra thunivaiketen Idiyai thaangum thozhai keten Izhivai thaangum idhayam keten Throgam thaangum valimai keten Tholaindhu vidaadha porumaiyai keten Sonnadhu ketkum ullam keten Sonnaal saagum vegam keten Kayavarai ariyum kangal keten Kaalam kadakum kaalgal keten Chinna chinna tholvigal keten Seekiram aarum kaayam keten Moodiyillaadha mugangal keten Poliyillaadha punnagai keten Thavazhum vayadhil thaai paal keten Thaavum vayadhil bommaigal keten Aindhu vayadhil puthagam keten Aaraam viralaai pena keten Kaasae vendam karunai keten Thalaiyanai vendam thaai madi keten Kootu kilipol vaazha keten Kuraindha patcha anbai keten Ithanai ketum kidaikavillai Idhilae edhuvum nadakavillai Vaazhve vaazhve vendam endru Maranam maranam maranam keten. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன் ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன் வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன் இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் இளமை கெடாத மோகம் கேட்டேன் பறந்து பறந்து நேசம் கேட்டேன் பாசாங்கில்லாத பாசம் கேட்டேன் புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் பூவின் மடியில் படுக்கை கேட்டேன் தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக் கேட்டேன் நிலவில் நனையும் சோலை கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன் நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன் தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன் துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன் atozlyric.com பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன் மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன் உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன் ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன் வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் வாழும் போதே சொர்க்கம் கேட்டேன் எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் எரியும் தீயாய் கவிதை கேட்டேன் கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் காமம் கடந்த யோகம் கேட்டேன் சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன் உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக் கேட்டேன் பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன் பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன் நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்க விடாத செல்வம் கேட்டேன் மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன் நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் அழுதால் மழை போல் அழவே கேட்டேன் ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன் பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன் ராஜராஜனின் வாளைக் கேட்டேன் வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன் பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன் மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன் சொந்த உழைப்பில் சோறை கேட்டேன் தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன் மழையைப் போன்ற பொறுமையை கேட்டேன் புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன் இடியைத் தாங்கும் தோளை கேட்டேன் இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன் துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன் தொலைந்து விடாத பொறுமையை கேட்டேன் சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் சொன்னால் சாகும் வேகம் கேட்டேன் கயவரை அறியும் கண்கள் கேட்டேன் காலம் கடக்கும் கால்கள் கேட்டேன் சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன் சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன் மூடியில்லாத முகங்கள் கேட்டேன் போலியில்லாத புன்னகை கேட்டேன் தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன் ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் காசே வேண்டாம் கருணை கேட்டேன் தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன் கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன் குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன் இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் மரணம் மரணம் கேட்டேன். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Satham Illatha Thanimai Ketten lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, Sujatha Mohan, music by Ramani Bharadwaj. Includes YouTube video and lyrics in multiple languages.